Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஈவ்னிங் டைம்-ல டக்குன்னு டீ கடை இனிப்பு போண்டாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Tea Kadai Sweet Bonda Recipe: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒருமுறை டீ கடை இனிப்பு போண்டாவை செய்யுங்கள். இந்த டீ கடை இனிப்பு போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு டீ கடை இனிப்பு போண்டாவை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீ கடை இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ரவை - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் ரவை மற்றும் 1/2 கப் சர்க்கரையை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற
வைப்பதன் மூலம், ரவை நன்கு ஊறியிருக்கும். இதனால் போண்டாவும் நன்கு
மென்மையாக இருக்கும்.
* 1/2 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் 1 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஆப்ப சோடா
சேர்க்க வேண்டாம் என்றால், இந்த கலவையை 1 மணிநேரம் ஊற வையுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு சிறு
கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். உடனே உடனே மாவை
ஊற்றாமல், மாவு நன்கு உப்பி போண்டா போன்று வந்த பின் அடுத்த கரண்டியை
விடுங்கள். இப்படி அனைத்து மாவையும் போண்டாக்களாக சுட்டு எடுத்தால்,
டீ கடை இனிப்பு போண்டா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications