Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
டீக்கடை வெங்காய போண்டா மொறுமொறுன்னு இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Tea Kadai Onion Bonda Recipe In Tamil: மாலை வேளை வந்தாலே மழை வெளுத்து வாங்குகிறது. இப்படி மழை பெய்யும் போது காபி, டீயுடன் நன்கு சூடாகவும் மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். உங்களுக்கு வழக்கமாக செய்யும் பஜ்ஜி, போண்டாவை சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் டீக்கடை ஸ்டைலில் வெங்காய போண்டா செய்து சாப்பிடுங்கள். இந்த டீக்கடை வெங்காய போண்டா வழக்கமாக சாப்பிடும் போண்டாவைப் போன்று இல்லாமல், எவ்வளவு நேரமானாலும் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த டீக்கடை வெங்காய போண்டாவை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு டீக்கடை வெங்காய போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை வெங்காய போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி மாவு - 150 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சிவப்பு நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 டீஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா, சோம்பு ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சரிசி மாவு, மிளகாய் தூள்,
சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிவப்பு நிற கேசரி பவுடர், ஆப்ப சோடா, மைதா மாவு,
கடலை மாவு, கரம் மசாலா சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், போண்டா மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான டீக்கடை வெங்காய போண்டா தயார்.



Click it and Unblock the Notifications
