Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
சுவையான.. பூசணிக்காய் பொரியல்
மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் மஞ்சள் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள்.
மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் மஞ்சள் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். மஞ்சள் பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.

குறிப்பாக மஞ்சள் பூசணியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை தாமதப்படுத்தி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதில் கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைப்போருக்கு மிகச்சிறப்பான காய்கறி.
MOST READ: ருசியான.... வாழைக்காய் வறுவல்
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காயைக் கொண்டு எப்படி பொரியல் செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் (நறுக்கியது)
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 3
* துருவிய தேங்காய் - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பின் அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு மஞ்சள் பூசணியை சேர்த்து ஒருமுறை வதக்கி விட வேண்டும்.
* பின்பு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் தெளித்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* இறுதியில் அதில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications








