Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
ருசியான.... வாழைக்காய் வறுவல்
இன்று மதிய சாப்பாட்டுக்கு சாம்பாருக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான ஒரு வறுவலை செய்து சாப்பிடுங்கள்.
வாழைப்பழத்தைப் போன்றே வாழைக்காயும் ஏராளமான சத்துக்களைத் தன்னுள் கொண்டது. பலர் வாழைக்காய் வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் என அதை தவிர்ப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. முக்கியமாக வாழைக்காயைத் தவிர்ப்பது என்பது கூடாது. வாழைக்காயால் வாய்வுத் தொல்லையை சந்திக்கிறீர்கள் என்றால், அதை சமைக்கும் போது, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வாய்வு தொல்லையைத் தவிர்க்கலாம். மேலும் எதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் பிரச்சனையை சந்திக்க நேரிடுமே தவிர அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையே விளையும்.

இன்று மதிய சாப்பாட்டுக்கு சாம்பாருக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான ஒரு வறுவலை செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக இந்த வறுவலுக்கு என்று பிரத்யேகமான ஒரு பொடி ஒன்று உள்ளது. இந்த பொடி தான் இந்த வறுவலின் சுவையைக் கூட்டுகிறது. சரி, வாருங்கள் இப்போது வாழைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 1
* வறுவல் பொடி - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
வறுவல் பொடி செய்வதற்கு...
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு சொம்பு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வாழைக்காயைப் போட்டு, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுவல் பொடிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொண்டு, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* அடுத்து, வேக வைத்து தனியாக வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு, 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இறுதியாக தயாரித்து வைத்துள்ள வறுவல் பொடியை ஒரு 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications