Latest Updates
-
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்!
தமிழ் புத்தாண்டுக்கு மா, பலா, வாழை வெச்சு.. இப்படி முக்கனி பாயாசத்தை செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்..
Tamil New Year Special Mukkani Payasam Recipe In Tamil: தமிழ் புத்தாண்டு அன்று அனைவரது வீட்டிலும் வடை, பாயாசத்துடன் விருந்து தயாரித்து சாப்பிடுவோம். அப்படி பாயாசம் செய்யும் போது, எப்போதும் வழக்கமாக செய்வது போன்று ஒரே சுவையில் தான் பாயாசத்தை செய்வீர்களா?
அப்படியானால் இந்த புத்தாண்டிற்கு வீட்டில் சித்திரை கனிக்கு வாங்கிய முக்கனிகளான மா, பலா, வாழையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசமானது நன்கு க்ரீமியாக இருப்பதால், இதை செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம்.

இந்த முக்கனி பாயாசம் குறித்து 5மினிட்ஸ்குக்கிங் என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த முக்கனி பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முக்கனி பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நைலான் ஜவ்வரிசி - 1/4 கப்
* கெட்டியான பால் - 1/2 லிட்டர்
* ஏலக்காய் - 2
* கண்டென்ஸ்டு மில்க் - 2-3 டேபிள் ஸ்பூன் அல்லது சர்க்கரை - 4 டேபிள்
ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* மாம்பழம் - 1
* பலாப்பழம் - 3
* வாழைப்பழம் - 1
* நெய் - 2 டீஸ்பூன்
* நட்ஸ் - தேவையான அளவு (பாதாம், பிஸ்தா, முந்திரி)
செய்முறை:
* முதலில் நைலான் ஜவ்வரிசியை நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்
வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கெட்டியான 1/2 லிட்டர் பாலை ஊற்றி, அதில்
2 ஏலக்காயை தட்டிப் போட்டு பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்ததும், அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு
கலந்து இறக்கி குளிர வைக்க வேண்டும். ஒருவேளை கண்டென்ஸ்டு மில்க்
இல்லாவிட்டால் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கலந்து
கொள்ளலாம்.
* பிறகு ஒரு வாணலியில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து, 1 கப் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு வேக வைத்து இறக்கி அதையும் குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மாம்பழத்தின் சதைப் பகுதியை துண்டுகளாக்கி
சேர்த்து அரைத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் பலாப்பழத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து, அதையும்
தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே ஜாரில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து, 2
டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு அரைத்து, அதையும் தட்டில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி, அத்துடன் வேக
வைத்த ஜவ்வரிசியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மாம்பழம், பலாப்பழம் மற்றும் வாழைப்பழத்தை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய நட்ஸ்களை தூவினால், சுவையான
முக்கனி பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications
