Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வரலட்சுமி நோன்பு ஸ்பெஷல்: தேங்காய் பூர்ண கொழுக்கட்டை
வரலட்சுமி நோன்பிற்கு கொழுக்கட்டை செய்து படைப்பார்கள். அப்படி செய்யும் செய்யும் கொழுக்கட்டைகளில் ஒன்று தான் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் ஈஸி. நீங்கள் இந்த கொழுக்கட்டையை செய்ய ஆசைப்பட்டால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு இந்த தேங்காய் பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொழுக்கட்டையானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வெல்லத்தை தட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்து தண்ணீர் சற்று கெட்டியாகும் வரை சூடேற்றி இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயில் உள்ள நீர் முற்றிலும் வற்றும் வரை வதக்க வேண்டும்.
பின்பு வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, தேன் போன்று கெட்டியாகும் நிலையில் வறுத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய் பொடி தூவி 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அந்த தேங்காய் கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து, அத்துடன் உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி, சுடுநீர் மெதுவாக ஊற்றிக் கொண்டே கரண்டியால் கிளறி, வெதுவெதுப்பாகும் வரை 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைந்து சிறிது நேரம் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் கைகளில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் உருண்டையை வைத்து, கூம்பு வடிவில் அல்லது பிடித்த வடிவில் கொழுக்கட்டை செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இறுதியில் இட்லி பாத்திரத்தில், அந்த கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து இறக்கினால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
