Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தற்போது ஸ்ட்ராபெர்ரி மிகவும் அதிகமாகவும், விலை குறைவுடனும் கிடைப்பதால், முடிந்த வரையில் அதனை வாங்கி சாப்பிடுவது உடலுக்கும், சருமத்திற்கு மிகவும் நல்லது. அத்தகைய ஸ்ட்ராபெர்ரியை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை மில்க் ஷேக் செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
மேலும் குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் மிகவும் பிடித்தாகவும் இருக்கும். அதிலும் அவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது, மாலை வேளையில் செய்து கொடுத்தால், அது ஒரு எனர்ஜி ஜூஸ் போன்றும் இருக்கும். இப்போது அந்த ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி - 7
பால் - 1 கப்
ஐஸ் க்ரீம் - 1 ஸ்கூப் (வென்னிலா/ஸ்ட்ராபெர்ரி)
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள இலைகளை நீக்கி, அதனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, பால், ஐஸ் க்ரீம், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு நைஸாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி!!!



Click it and Unblock the Notifications
