Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
ராகி கொழுக்கட்டை
மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ராகி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த ராகி கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கையளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, தனியாக பருப்பை வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் மற்றும் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ராகி கொழுக்கட்டை ரெடி!!!
Image Courtesy: spicytreats



Click it and Unblock the Notifications
