Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
ரக்ஷா பந்தன்: பாஸ்தா பாயாசம்
ரக்ஷா பந்தன் அன்று சகோதரர்களுக்கு ராக்கி கட்டிவிடும் போது, அவர்களுக்கு ஏதேனும் இனிப்புகளை கொடுக்க நினைத்தால், பாஸ்தா பாயாசம் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உங்கள் சகோதரர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு ரக்ஷா பந்தன் ஸ்பெஷலான பாஸ்தா பாயாசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மக்ரோனி - 1 கப்
பால் - 2 1/2 கப்
சர்க்கரை - 2-3 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில், நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.
அடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications
