For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா? வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி!!

சீசனுக்கு தகுந்தாற்போல், மாம்பழ சீசனில், மாம்பழத்தில் எப்படி லட்டு செய்யலாம் என்ற சுவையான ரெஸிபி இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. நீங்களும் செய்து பாருங்கள்.

By Divyalakshmi Soundarrajan
|

கோடை காலம் என்றால் கொளுத்தும் வெயில் மற்றும் வேர்வையை பிரச்சனைக்கு மட்டும் பேயர் பெற்றது அல்ல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும் சீசனாக இருக்கும். வெயில் காலமானது மாம்பழத்திற்கான சீசனாக உள்ளது. பழங்களின் ராஜாவாகிய மாம்பழம் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும்.

கோடை வெயிலில் சுற்றி வேலை பார்த்துவிட்டு களைத்துப் போய் வீட்டிற்கு வந்து, ஒரு டம்ளர் மாம்பழ லஸ்ஸி குடித்தால் அத்தனை களைப்பும் பறந்துப் போய்விடும். மாம்பழத்தை வைத்து நிறைய ரெசிபிகளை செய்யலாம்.

மாம்பழம் மட்டுமல்ல மாங்காயை வைத்து கூட நிறைய சமையல் செய்யலாம். மாங்காயை வைத்து பொதுவாக அனைவரும் ஊறுகாய் தான் செய்வார்கள். ஆனால், மாம்பழத்தை வைத்து நிறைய இனிப்புகள் மற்றும் ஜூஸ்கள் செய்யலாம்.

மாம்பழத்தை வைத்து பொதுவாக லஸ்ஸி மற்றும் ஷேக் செய்வார்கள். நீங்கள் மாம்பழ லட்டு சாப்பிட்டதுண்டா? இது தனி சுவை கொண்ட இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் மற்றும் மாம்பழ உள்ளதால் சுவை பிரமாதமாக இருக்கும்.

வாருங்கள் இப்போது நாம் மாம்பழ லட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்களைப் பற்றியும் செய்யும் பற்றியும் விரிவாக பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானப் பொருட்கள்

தேவையானப் பொருட்கள்

மாம்பழ கூழ் - 1/2 கப்

சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்

தேங்காய் பவுடர் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

நட்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

 ஸ்டெப்-1

ஸ்டெப்-1

இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

ஸ்டெப்--2

ஸ்டெப்--2

இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப்-3

ஸ்டெப்-3

இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். அந்த பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mango Coconut Ladoo Recipe

Mango Coconut Ladoo Recipe
Desktop Bottom Promotion