Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்
சாக்லெட் பிரியர்களுக்கு ட்ரிப்பிள் சாக்லேட் மில்க் ஷேக் ஒரு விருந்தாக அமையும். இந்த மில்க் ஷேக்கோடு, நொறுங்கிய சாக்லெட் துகள்களை சேர்ப்பது மேலும் ஊக்கம் அளிக்கும். அதிலும் புதிய சாக்லேட் துகள்களுக்கு பதிலாக நேற்றைய சாக்லேட் துகள்களை சேர்ப்பது நல்லது.
இப்போது இந்த ட்ரிப்பிள் சாக்லேட் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

சாக்லெட் ஐஸ்கிரீம் - 1-2 ஸ்கூப்
பால் - 8 அவுன்ஸ் (240 மி.லி)
சாக்லேட் குச்சிகள் அல்லது ஸ்ட்ரா - தேவையான அளவு
சாக்லேட் - இரண்டு (நொறுக்கப்பட்டது)
திரிக்கப்பட்ட க்ரீம் - தேவையான அளவு
சாக்லேட் சிரப் அல்லது சாஸ் - தேவையான அளவு
செய்முறை:
1. 8 அவுன்ஸ் பாலை பிலண்டர் அல்லது கலப்பானில் (Blender) சேர்க்கவும்.
2. பின் சாக்லேட் ஐஸ்கிரீமை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
3. ஐஸ்கிரீம் மற்றும் பால் நன்றாக ஒரு கலவையாக மாறும் வரை கலக்கவும்.
4. பின்னர் சாக்லேட் துகள்களை சேர்க்கவும். பின்பு திரிக்கப்பட்ட க்ரீம், சாக்லெட் சிரப் அல்லது சாஸ் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
5. மில்க் ஷேக் மிருதுவாக வரும் வரை நன்றாக கலக்கவும்.
6. இறுதியில் பிலண்டரை அணைத்துவிட வேண்டும். இப்போது அந்த ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்கை கண்ணாடி கோப்பைகளில் ஊற்ற வேண்டும்.
7. பின் அதன் மேல் சாக்லேட் சிரப் அல்லது சாஸை தெளித்து, ஸ்ட்ரா போட்டு பரிமாறவும்.
குறிப்பு:
வேண்டுமெனில் இதில் சாக்லெட் சுவை மற்றும் வாசனை அதிகமாக இருப்பதற்கு, சாக்லேட் துகள்களை அதிகமாக சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications