Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
தீபாவளி ஸ்பெஷல் ஜவ்வரிசி பாயாசம்
தீபாவளிக்கு மதிய வேளையில் வடை பாயாசத்துடன் சமைக்கும் போது, அப்போது சேமியா பாயசம் செய்வதற்கு பதிலாக, ஜவ்வரிசி கொண்டு பாயாசம் செய்தால், அது வித்தியாசமானதாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஏனெனில் ஜவ்வரிசியில் ஊட்டச்சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளது. ஆகவே இந்த வருட தீபாவளிக்கு ஜவ்வரிசி பாயாசம் செய்து மகிழுங்கள்.
இப்போது அந்த ஜவ்வரிசி பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1/3 கப்
சர்க்கரை - 1/4 கப்
பால் - 5 கப்
முந்திரி - 6-8 (நறுக்கியது)
பாதாம் - 5
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நீரில் போட்டு, நன்கு பெரியதாகும் வரை, குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குங்குமப்பூவை 1 டேபிள் ஸ்பூன் பாலில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து பாலை ஓரளவு சுண்ட வைக்க வேண்டும்.
பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, ஜவ்வரிசி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
ஜவ்வரியானது நன்கு வெந்ததும், ஊற வைத்துள்ள குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.
பின் அதில் நட்ஸ், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications