Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
சுவையான மைதா அல்வா

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
உருக்கிய நெய் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8
செய்முறை:
முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு பிசைந்த அந்த மாவை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீரை மாவு மூழ்கும் அளவிற்கு ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின் மாவானது நீரில் ஊறியதும், அந்த மாவை கை விட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மேலே இருக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
ஆகவே இவ்வாறு ஒரு 1 1/2 லிட்டர் மைதாப் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மைதா அல்வாவை மைதா பாலை வைத்து தான் செய்ய வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது கொதித்து நுரைநுரையாக வரும் போது, தீயைக் குறைத்து அதில் மைதாப் பாலை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
இவ்வாறு ஒரு 5 நிமிடம் கிளறியதும், பின் அதில் கேசரி பவுடர், நெய் சேர்த்து கெட்டியாக கிளறவும். அல்வா பதம் வந்ததும், அத்துடன் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான மைதா அல்வா ரெடி!!!



Click it and Unblock the Notifications
