Latest Updates
-
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்
கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள்.
அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்
கேரமலுக்கு...
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கேக்கிற்கு...
மைதா - 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 5
வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேரமல் - 1 கப்
ஊற வைத்த பழங்கள் - 3 கப்
ரம் - 2 டீஸ்பூன்

செய்முறை
கேரமல் செய்ய...
* முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம்.
* சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். முக்கியமாக சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

செய்முறை
* சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்க வேண்டும்.

செய்முறை
கேக் செய்ய...
* முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் 2, 8x2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை
* பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து உற்றி நன்கு அடிக்க வேண்டும்.
* பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

செய்முறை
* பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.

செய்முறை
* இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும் போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.
* பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.

செய்முறை
* பின் கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
