Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆடி வெள்ளி ஸ்பெஷல்: தேங்காய் பாயாசம்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மதிய வேளையில் பெரும்பாலான வீடுகளில் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமை என்றால் சொல்லவா வேண்டும். அந்நாளன்று வீடே மங்களகரமாக, நறுமணத்துடன் கமகமவென்று இருக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த ஆடி வெள்ளிக்கு மதியம் என்ன பாயாசம் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், தேங்காய் பாயாசம் செய்யுங்கள்.
இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மிகுந்த சுவையைக் கொண்டதும் கூட. சரி, இப்போது அந்த தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 3/4 கப்
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 8-10
காய்ச்சி குளிர வைத்த பால் - 1/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு வைத்து, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள பச்சரிசி கலவையானது ஓரளவு கெட்டியாக கஞ்சி போன்று வரும் போது, அதில் வெல்லப் பாகுவை ஊற்றி, பின் அதில் ஏலக்காயை நன்கு தட்டிப் போட்டு கிளறி, கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்துடன் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கழித்து அதில் பாலை ஊற்றி கிளறினால், தேங்காய் பாயாசம் ரெடி!!!
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications