Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தேங்காய் போளி

தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அத்துடன் கேசரி பவுடர், உப்பு, நல்லெண்ணெய் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காயை துருவிக் கொள்ளவும். கடலைப் பருப்பை நீரில் கால் மணிநேரம் ஊற வைக்கவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு 2-3 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லமானது நன்கு கரைந்து ஒன்று சேர்ந்ததும், அதனை இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஏலக்காய் பொடியையும் போட்டு பிசைந்து, பூரணத்தை செய்து கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு பூரணத்தையும் சிறு உருண்டைகளாக உருட்டவும்.
பின் ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து அதில் நல்லெண்ணெயை தடவி, மைதா உருண்டையை வைத்து வட்டமாக கையால் செய்யவும். பிறகு அதன் மேல் பூரண உருண்டையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மைதா மாவைக் கொண்டு நன்கு மூடவும். பிறகு அதனை வட்டமாக போளி போல் தட்டவும்.
பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய்யைத் தடவி தட்டி வைத்துள்ள போளியைப் போடவும். இவ்வாறு இரு பக்கமும் நெய்யைத் தடவி, கேஸை சிம்மில் வைத்து வேக விட்டு எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான, இனிப்பான தேங்காய் போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications
