Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க..
Wheat Banana Sweet Vada Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்க வேண்டுமா? அதுவும் அவர்களுக்கு நல்ல சுவையான, அதே சமயம் சத்தான ஒரு ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், வாழைப்பழம் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு சூப்பரான சுவையில் இனிப்பு மெது வடை செய்து கொடுங்கள். இந்த வாழைப்பழ வடையானது பஞ்சு போன்று மென்மையாகவும் இருக்கும், குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

உங்களுக்கு இந்த கோதுமை வாழைப்பழ வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை வாழைப்பழ வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நேந்திரம் பழம்/பச்சை வாழைப்பழம் - 2
* பொடித்த வெல்லம் - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சின்ன கேரட் - 1
* கோதுமை மாவு - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வாழைப்பழத்தை இட்லி பாத்திரத்தினுள் வைத்து 2 நிமிடம்
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில்
வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/4 கப் பொடித்த வெல்லம், 1/2 கப் துருவிய தேங்காய்
மற்றும் கேரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு கைகளால் அனைத்தையும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் கோதுமை மாவு, ஏலக்காய் தூள், சோடா மாவு, உப்பு
ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் கையில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி,
உளுந்து வடை போல் தட்டி நடுவே துளையிட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை போட்டு குறைவான தீயில்
வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கோதுமை வாழைப்பழ வடை
தயார்.



Click it and Unblock the Notifications
