Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
Sweet Rava Bonda Recipe In Tamil: ஈவ்னிங் வந்தாலே வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்பார்களா? அதுவும் குழந்தைகள் இருந்தால், நிச்சயம் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் வழக்கமாக செய்வது போன்று ஸ்நாக்ஸ் செய்யாமல், வீட்டில் 1 கப் ரவை இருந்தால், அந்த ரவையைக் கொண்டு இனிப்பு ரவா போண்டாவை செய்து கொடுங்கள்.
இந்த ரவா போண்டா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சற்று வித்தியாசமான ருசியிலும் இருக்கும். முக்கியமாக இந்த போண்டாவை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்வார்கள்.

உங்களுக்கு ஸ்வீட் ரவா போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் ரவா போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சிறிது
* பிரியாணி இலை - 2
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1 கப்
உள்ளே வைப்பதற்கு...
* பொடித்த வெல்லம் - 1/4 கப்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, 1
சிட்டிகை உப்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும், ரவையை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ரவையானது நன்கு வெந்து சுருண்டு வந்ததும், அதை இறக்கி ஒரு தட்டில்
போட்டு, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொடித்த வெல்லத்தை
சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் மட்டும் நீரை ஊற்றி, வெல்லத்தை
கரைய விட வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து ரவையை நன்கு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மென்மையாக
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த சிறிது ரவையை எடுத்து உருட்டி தட்டையாக தட்டி, நடுவே
சிறிது தேங்காய் கலவையை வைத்து மடித்து, ஓரளவு தட்டையாக தட்டிக் கொள்ள
வேண்டும். இதேப் போன்று மீதமுள்ள மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ளதை சேர்த்து,
மிதமான தீயில் வைத்து முன்னும், பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து
எடுத்தால், சுவையான ஸ்வீட் ரவா போண்டா தயார்.



Click it and Unblock the Notifications
