Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Sundal Sukka Recipe in Tamil: சுக்கா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மட்டன் சுக்கா அல்லது சிக்கன் சுக்காதான். அதேசமயம் சில காய்கறிகளை வைத்து சைவ சுக்காவும் செய்யலாம். ஆனால் சுண்டலை வைத்து சுக்கா சமைத்து இருக்கிறீர்களா? பொதுவாக சுக்கா செய்தாலே அது சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும். இந்த சுண்டல் சுக்காவும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த சுண்டல் சுக்கா சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ஸ்டைலில் சுண்டலை செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு செட்டிநாடு சுண்டல் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டல் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
குக்கரில் வேக வைக்க:
- 1 கப் கொண்டைக்கடலை
- தேவையான அளவு தண்ணீர்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
வறுத்து அரைக்க:
- 1 டீஸ்பூன் சோம்பு
- 5 கிராம்பு
- 1 ஸ்பூன் மல்லி விதை
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 இன்ச் பட்டை
- 3 ஸ்பூன் தேங்காய்
தாளிக்க:
- 1 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- கறிவேப்பிலை
- 1 1/2 கப் வெங்காயம்
- 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- அரை கப் தண்ணீர்
- 1 மேசைக்கரண்டி கெட்டித் தயிர்
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- எலுமிச்சை சாறு - ஸ்பூன்
செய்முறை:
- முதலில் சுண்டலை நன்றாகக் கழுவி இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, குக்கரில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- ஒரு கடாயை சூடாக்கி அதில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
- மசாலா பொருட்கள் வாசனை வந்ததும் அடுப்பை அணைத்து துருவிய தேங்காய் சேர்த்து கிளறி ஆற வைக்கவும்.
- இந்த கலவை ஆறியதும் கொரகொரப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான, அகலமான வாணலியில் எண்ணெயை ஊற்றிச்
சூடாக்கவும்.
️
- எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சேர்த்து அதை பொரிய விடவும்.
- ️அதனுடன் கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, நன்கு கலக்கிய தயிர், உப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
- பிறகு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை சமைக்கவும்.
-️ இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து, பரிமாறும் வரை மூடியே வைத்திருக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான சுண்டல் சுக்கா ரெடி!



Click it and Unblock the Notifications
