Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு-ன்னு இந்த மாதிரி மோர் செஞ்சு குடிங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Summer Special Manga Masala Mor Recipe In Tamil: தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் வகையில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடலில் நீர்ச்சத்தானது வியர்வை வழியாக வெளியேறி, நிறைய தாகத்தை சந்திக்க நேரிடும். இந்நிலையில் எப்போதும் வெறும் தண்ணீரைக் குடிக்க பிடிக்காமல், சிலர் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடிப்பார்கள்.
ஆனால் இப்படி செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு விற்கப்படும் கூல்ட்ரிங்க்குகளை குடித்தால், தற்காலிகமாக தாகம் அடங்கினாலும், உடலில் நீரிழப்பு தான் ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் தயிர் கொண்டு மோர் தயாரித்து குடித்தால், தாகம் அடங்குவதோடு, உடலும் குளிர்ச்சியாக இருக்கும். அதுவும் வெறும் மோரை செய்து குடிக்காமல், மசாலா மோர் செய்து குடித்தால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

குறிப்பாக அந்த மசாலா மோருடன் சில துண்டுகள் மாங்காயை சேர்க்கும் போது, சுவை இன்னும் வேற லெவலில் இருக்கும். எனவே அடுத்தமுறை மோர் செய்வதாக இருந்தால், இந்த மாங்காய் மசாலா மோரை செய்து குடியுங்கள். இப்படி மோர் செய்யும் போது, மோர் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு மாங்கா மசாலா மோரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்கா மசாலா மோர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கிளி மூக்கு மாங்காய் - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரஷ்ஷான கெட்டித் தயிர் - தேவையான அளவு
* ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சற்று புளிப்பான கிளி மூக்கு மாங்காயை துண்டுகளாக்கி ஒரு
கையளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட மாங்காயை சேர்த்து,
அத்துடன் 1 பச்சை மிளகாய், 1 இன்ச் இஞ்சி, 1 கொத்து கறிவேப்பிலையை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் பெருங்காயத் தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது பிரஷ்ஷான கெட்டித் தயிரை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் எவ்வளவு மோர் வேண்டுமோ அந்த அளவு தயிரை சேர்த்து,
அத்துடன் ஐஸ் தண்ணீரை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மோரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மோருடன் ஊற்றி
கிளறினால், சுவையான மாங்கா மசாலா மோர் தயார்.



Click it and Unblock the Notifications