Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..
மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ
கேரளாவின் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு மசாலா டீ உள்ளது. அதன் பெயர் சுலைமணி டீ. இந்த சுலைமணி டீ அரபு பாரம்பரியத்திலிருந்து உருவானது என்று நம்பப்படுகிறது.
மாலை வேளையில் சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான பானம் குடிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரளாவின் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு மசாலா டீ உள்ளது. அதன் பெயர் சுலைமணி டீ. இந்த சுலைமணி டீ அரபு பாரம்பரியத்திலிருந்து உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த டீயை மலபாரில் உள்ள மக்கள் பிரியாணி சாப்பிட்ட பிறகு குடிப்பார்கள். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதோடு உடலில் உள்ள கொழுப்புக்களையும் குறைக்க வல்லது.

உங்களுக்கு மலபார் ஸ்பெஷல் சுலைமணி டீ எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த சுலைமணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 கப்
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1/4 இன்ச்
* ஏலக்காய் - 2
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* டீ தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - விருப்பமிருந்தால் சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் டீ தூள் சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும்.
* பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* இறுதியாக, அதை வடிகட்டினால், சுவையான சுலைமணி டீ தயார்.
குறிப்பு:
* இந்த டீ தயாரிக்கும் போது, இனிப்பு சுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* டீ தூள் சேர்க்க விருப்பமில்லாதவர்கள், அதைத் தவிர்க்கலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications