முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Stuffed Egg Bread Toast Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்கும் வகையில் அற்புதமான ஸ்நாக்ஸ் செய்து கொள்ள நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட்டும், முட்டையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஸ்டஃப்டு முட்டை பிரட் டோஸ்ட்டை செய்யுங்கள்.

இந்த பிரட் டோஸ்ட்டை ஒருமுறை செய்தால், உங்கள் பிள்ளைகள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும். அதுவும் தேர்வு நேரங்களில் மாலை வேளையில் படிக்கும் போது, இந்த பிரட் டோஸ்ட்டை 2 செய்து கொடுத்தால் போதும், பசியும் அடங்கும், படிப்பில் முழு கவனமும் செலுத்த முடியும்.

Stuffed Egg Bread Toast How To Make Stuffed Egg Bread Toast Recipe

உங்களுக்கு இந்த ஸ்டஃப்டு முட்டை பிரட் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்டஃப்டு முட்டை பிரட் டோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிரட் - 8 துண்டுகள்
* எண்ணெய் - தேவையான அளவு

மசாலாவிற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீஸ் - 200 கிராம் (துருவியது)

முட்டை கலவைக்கு...

* முட்டை - 2
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கேரட்டை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போக மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* மசாலா நன்கு குளிர்ந்த பின் அதில் துருவிய சீஸை சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பிரட் துண்டுகளை எடுத்து, ஒரு வட்ட மூடியைப் பயன்படுத்தி வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் நடுவே சிறிது மசாலாவை வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து அழுத்தி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தயாரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை முட்டை கலவையில் பிரட்டி எடுத்து போட்டு, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் திருப்பி திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான ஸ்டஃப்டு முட்டை பிரட் டோஸ்ட் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, March 21, 2026, 19:05 [IST]
Desktop Bottom Promotion