Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
சப்பாத்திக்கு அசத்தலாக இருக்கும்... ரோட்டுக்கடை பன்னீர் புர்ஜி கிரேவி
Street Style Paneer Bhurji Gravy: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இப்போதிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா?
அப்படியானால் பன்னீரைக் கொண்டு ரோட்டுக்கடை பன்னீர் புர்ஜி கிரேவி செய்யுங்கள். இந்த பன்னீர் புர்ஜி கிரேவி செய்வது மிகவும் சுலபம். இந்த பன்னீர் புர்ஜி கிரேவி வடஇந்தியாவில் உள்ள ரோட்டுக்கடைகளில் செய்யக்கூடிய ரெசிபி. இது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை பன்னீர் புர்ஜி கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை பன்னீர் புர்ஜி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1 கப்
* பன்னீர் - 200 கிராம் (உதிர்த்துக் கொள்ளவும்)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் சீரகத்தை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு தீயைக் குறைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள்,
மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 1 கப் அல்லது கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, உதிர்த்த பன்னீரை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில்
வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பன்னீர் அதிகமாக வேக வைத்துவிட
வேண்டாம். இல்லாவிட்டால், அது ரப்பர் போன்று மாறிவிடும்.
* பின் அதில் கரம் மசாலா, கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியைத் தூவ
கிளறி இறக்கினால், சுவையான ரோட்டுக்கடை பன்னீர் புர்ஜி கிரேவி
தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications
