Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் கிடைக்கும் அக்காரவடிசல் செய்ய தெரியுமா?
திருப்பதியில் லட்டு, பழனியில் பஞ்சாமிர்தம் போல திருச்சி ஸ்ரீரங்கத்தில் அக்காரவடிசல் பிரசாதம் ரொம்பவே ஸ்பெஷல்.. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் அக்காரவடிசல் பிரதானமான ஒன்று. ஸ்ரீரங்கம் மட்டுமல்ல திருச்சியில் உள்ள பல கோயில்களில் இந்த அக்காரவடிசல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அக்காரவாசலும் சர்க்கரை பொங்கலும் பார்ப்பதற்கு ஒன்று போலதான் தெரியும் ஆனால் இவை இரண்டுமே வெவ்வேறு. அக்காரவடிசலை முழுக்க முழுக்க பாலில்தான் செய்வார்கள்.. மிக முக்கியமாக இதை புது அரிசியில்தான் செய்வார்கள்.. அப்போதுதான் நன்றாக குழைந்து வரும்.. இதன் சுவை சும்மா சூப்பராக இருக்கும்.. வாங்க இதை வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்
1. பச்சரிசி - 2 கப்
2. பாசிப்பருப்பு - 1 கப்
3. வெல்லம் - 6 கப்
4. பால் - 12 கப்
5. பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை,
6. ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்
7. முந்திரி - ஒரு கைப்பிடி
8. உலர் திராட்சை - 1 கைப்பிடி
9. நெய் - 250 மில்லி
செய்முறை
1. முதலில் நீங்கள் செய்யும் அளவிற்கு ஏற்ப புது அரிசியை எடுத்துக் கொள்ளவேண்டும்.. அதன் பிறகு, பாசி பருப்பு, தண்ணீர், பால் ஊற்றி குக்கரில் நான்கு விசில் அடிக்கும் வரை வேக வைக்க வேண்டும்..
2. அரிசி பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து குழைந்துவிடும்.
இப்போது கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரில் வேக வைத்த
சாதத்தை போடவும்.
3. இதிலும் கால் லிட்டர் பால் ஊற்றுங்கள். இப்போது வேக வைத்த சாதத்தை பாலில் கொதிக்க விடவும்..
4. இதன் பிறகு கால் ஸ்பூனுக்கும் குறைவாக ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் போட்டு கலந்து விடுங்கள்.
5. இப்போது 300 கிராம் வெல்லத்தை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்..பின்னர் அதை இந்த கலவையுடன் சேருங்கள்.. அக்காரவடிசலின் நிறம் முற்றிலுமாக மாறும். ஒரு சிட்டிகை உப்பு போடுங்கள்.
6. அடுத்ததாக 100 மில்லி லிட்டர் நெய் ஊற்றவும். அது உருகிய பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
7. இதை அப்படியே நெய், பாலில் வேகும் சாதத்தின் மீது
ஊற்றுங்கள்.
நெய் நன்றாக கலந்து கண்களில் தென்படாத வரை கிளறிக் கொண்டே
இருங்கள்.
இறுதியாக இன்னும் 100 மில்லி லிட்டர் நெய் சேர்த்து கலந்து ஐந்து
நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்போது சாமி பிரசாதமான
ஸ்ரீரங்காவின் அக்காரவடிசல் வீட்டிலேயே ரெடி..
8. இதை கண்டிப்பாக குழந்தைகளும் வீட்டில் உள்ள பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.. ட்ரை பண்ணுங்கள்..



Click it and Unblock the Notifications
