Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி
முளைக்கட்டிய பச்சை பயறு உடலுக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு பச்சையாக முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிட பிடிக்காவிட்டால், அதைக் கொண்டு கிரேவி தயாரித்து, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
முளைக்கட்டிய பச்சை பயறு உடலுக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு பச்சையாக முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிட பிடிக்காவிட்டால், அதைக் கொண்டு கிரேவி தயாரித்து, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். இது வித்தியாசமாக இருப்பதுடன், மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இம்மாதிரியான கிரேவி செய்து கொடுப்பது நல்லது. இதனால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இப்போது முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு/பாசி பயறு - 1/2 கப்
தேங்காய் மசாலாவிற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 2
* புளி பேட் - 1/4 டீபூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டீபூன்
* கடுகு - 1 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பச்சை பயறு அல்லது பாசி பயறை நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை நன்கு நீரில் கழுவி, ஒரு ஈரமான துணியில் போட்டு கட்டி தொங்க விடவும். மறுநாள் பாசி பயறு முளைக்கட்டியிருக்கும். இப்போது அதை மீண்டும் நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் முளைக்கட்டிய பச்சை பயறை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* அதே சமயம் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய் மற்றும் புளியைப் போட்டு சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் உள்ள முளைக்கட்டிய பச்சை பயறுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கிரேவியுடன் சேர்த்து கிளறினால், முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications