Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
காரசாரமான.. தக்காளி ஆம்லெட் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Spicy Tomato Omelette Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை ஆம்லெட் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டை ஆம்லெட்டை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை தக்காளி ஆம்லெட்டை செய்யுங்கள்.
இந்த ஆம்லெட்டை சூடான சாதத்துடனும் சாப்பிடலாம் அல்லது வெறுமனே கூட சாப்பிடலாம். இந்த ஆம்லெட்டை ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும். பேச்சுலர்கள் இப்படியான ஆம்லெட்டை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு கைக்கொடுக்கும்.

உங்களுக்கு இந்த காரசாரமான தக்காளி ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* முட்டை - 3
செய்முறை:
* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள்
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அடித்து வைத்துள்ள முட்டையை மசாலாவில் ஊற்றி, முன்னும்
பின்னும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும்
காரசாரமான தக்காளி ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications





