Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
சுவையான... அரிசி சாத கட்லெட்
மாலையில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், மதியம் சமைத்த சாதத்தைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் அத்துடன் சில காய்கறிகளை சேர்த்து செய்தால், இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த கட்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த அரிசி சாத கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி சாதம் - 1 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி சாத கட்லெட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
