Latest Updates
-
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க
ருசியான... பன்னீர் 65
சிக்கன் 65, கோபி 65 பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பன்னீர் 65 கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும். இன்று மாலை நீங்கள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்தால், பன்னீர் 65 செய்து சுவையுங்கள்.
இங்கு பன்னீர் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மாவிற்கு...
மைதா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பன்னீரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அந்த மாவில் பன்னீர் துண்டுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் 65 ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
