வென்னிலா மில்க் ஷேக்

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்க நினைத்தால், வென்னிலா மில்க் ஷேக் குடியுங்கள். இதனால் அதில் உள்ள வென்னிலாவின் நறுமணத்தால் உடல் புத்துணர்வடையும். மேலும் இந்த மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த வென்னிலா மில்க் ஷேக்கை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம்.

Vanilla Milkshake

தேவையான பொருட்கள்:

வென்னிலா எசன்ஸ் - 3 டீஸ்பூன்

சர்க்கரை - 3/4 கப்

பால் - 1/2 லிட்டர்

வென்னிலா ஐஸ் க்ரீம் - 1 கப்

பாதாம், பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் மிக்ஸி ஜாரில் பால், வென்னிலா ஐஸ் க்ரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வென்னிலா மில்க் ஷேக் ரெடி!!!

English summary

Easy And Tasty Vanilla Milkshake Recipe

Milkshakes are the best in the drinks. And here is how you prepare vanilla milk shake. You can prepare this as an evening drink or after your dinner.
Subscribe Newsletter