Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
பீச் சுண்டல் என்று அழைக்கப்படும் தேங்காய், மாங்காய் மற்றும் வெள்ளை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சுண்டலை பலரும் கடற்கரை செல்லும் போது சுவைத்திருப்போம். ஆனால் அதை வீட்டில் செய்து சுவைத்ததுண்டா? நவராத்திரி என்பதால் பலரும் மாலையில் பூஜை செய்யும் போது ஏதேனும் படையல் செய்வார்கள்.
இன்றைய பூஜைக்கு சற்று வித்தியாசமாக தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை செய்து படையுங்கள். இதை செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை பட்டாணி - 1 கப்
துருவிய மாங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வெள்ளை பட்டாணியை குறைந்தது 6-8 மணிநேரமாவது ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் சிறிது உப்பு தூவி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் வெள்ளை பட்டாணியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் துருவிய மாங்காய், தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் தயார்!!!



Click it and Unblock the Notifications