Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பசலைக்கீரை சூப்
மழைக்காலங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் கீரைகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அதுவும் பசலைக்கீரையை பொரியல், கடையல் என்று செய்து சுவைத்து போர் அடித்திருந்தால், அதனை மாலை வேளையில் சூப் செய்து குடியுங்கள்.
இங்கு பசலைக்கீரை சூப்பை எப்படி எளிய வழியில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
பிரியாணி இலை - 1
கிராம்பு - 4
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள்
பசலைக்கீரை - 3 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகு - தேவையான அளவு
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் பசலைக்கீரை சேர்த்து 5-7 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி விட வேண்டும்.
பிறகு அதில் உள்ள பட்டை, பிரியாணி இலை, கிராம்பு ஆகியவற்றை எடுத்துவிட்டு, மீதமுள்ளதை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் சோள மாவை பாலில் சேர்த்து கலந்து, சூப்புடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பசலைக்கீரை சூப் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications