Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சளி இருமலுக்கு இதமாக இருக்கும் மஞ்சள் மிளகு பால்
குளிர்காலத்தில் நிறைய மக்கள் சளி, இருமலால் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள், மஞ்சள் மிளகு பாலைத் தயாரித்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான முறையில் செய்யத் தெரியாது.
அத்தகையவர்களுக்காகத் தான் தமிழ் போல்ட் ஸ்கை மஞ்சள் மிளகு பாலின் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து குடித்து சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.

தேவையான பொருட்கள்:
பால் - 1 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பால் நன்கு கொதித்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்த்து கரைய விட வேண்டும். பனங்கற்கண்டு கரைந்த பின், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், மஞ்சள் மிளகு பால் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
