Latest Updates
-
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
வாஸ்து படி உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன தவறுகள் உங்களுக்கு ராகுவின் சாபத்தை பெற்றுத்தருமாம் - ஜாக்கிரதை -
இந்தியாவின் இந்த கிராமத்தில் திருமணம் என்ற உறவே கிடையாதாம் - லிவ்-இன் உறவு மட்டும்தானாம்- எங்க தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
அக்டோபர் 31, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்
நீங்கள் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அப்படியானால் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் டயட்டில் ஓட்ஸை எடுத்து வந்தால், உடல் எடையானது விரைவில் குறைவதுடன், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.
இங்கு ஓட்ஸை மாதுளையுடன் சேர்த்து எப்படி மில்க் ஷேக் செய்வது என்று விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டில் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மாதுளை - 1 பழம்
ஓட்ஸ் - 1/2 கப்
குளிர்ந்த பால் - 2 1/2 கப்
தேன் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் மாதுளையை சுத்தம் செய்து, அதன் விதையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் மாதுளை, வறுத்த ஓட்ஸ் மற்றும் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் தேன் சேர்த்து ஒருமுறை அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
