Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி வடை
நவராத்திரி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பதுடன், கொழு பொம்மைகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். அதே சமயம் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் என்ன ரெசிபி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். எனவே அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
அதற்கு பெயர் ஜவ்வரிசி வடை. இந்த வடையானது மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 (சிறியது)
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி வடை ரெடி!!!
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications
