For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிச்சி அன்னாசி ஸ்மூத்தி

By Maha
|

கோடையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க லிச்சியை சாப்பிடலாம். இந்த பழம் மிகவும் சுவையுடன் இருக்கும். அதிலும் இதனை அன்னாசியுடன் சேர்த்து ஸ்மூத்தி செய்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் ஈஸி.

இங்கு அந்த லிச்சி அன்னாசி ஸ்மூத்தியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Lychee Pineapple Smoothie

தேவையான பொருட்கள்:

லிச்சி - 4 (தோலுரித்து, விதைகளை நீக்கியது)
அன்னாசி - 100 கிராம்
கெட்டியான தயிர் - 100 கிராம்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
வென்னிலா ஐஸ் க்ரீம் - 1 ஸ்கூப்
ஐஸ் கட்டிகள் - 2

செய்முறை:

முதலில் மிக்ஸியில் லிச்சியை போட்டு, பின் அன்னாசியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அதனையும் மிக்ஸியில் போட்டு, தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஐஸ் க்ரீமை சேர்த்து தேன் ஊற்றி கலந்து பரிமாறினால், லிச்சி அன்னாசி ஸ்மூத்தி ரெடி!!!

English summary

Lychee Pineapple Smoothie

Lychee pineapple smoothie is a very refreshing summer drink. The lychee pineapple smoothie recipe is very simple. Try this recipe to enjoy the summer..
Story first published: Friday, May 30, 2014, 15:44 [IST]
Desktop Bottom Promotion