Latest Updates
-
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்..
உருளைக்கிழங்கு முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல்
தீபாவளி வருகிறது என்றாலே அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்ய ஆரம்பிப்போம். அப்படி தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானோர் செய்யும் பலகாரங்களில் ஒன்று தான் முறுக்கு. இத்தகைய முறுக்கில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் உருளைக்கிழங்கு முறுக்கு. இந்த முறுக்கு செய்வது மிகவும் ஈஸி.
இங்கு அந்த உருளைக்கிழங்கு முறுக்கின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
இடியாப்ப மாவு/அரிசி மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, வெண்ணெய், சீரகம், பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் உற்றி, நன்கு மென்மையாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெயானது சூடாவதற்குள், ஒரு தட்டில் துணியை விரித்துக் கொண்டு, பின் முறுக்கு அச்சை எடுத்து, அதனுள் எண்ணெய் தடவி, அதனுள் சிறிது முறுக்கு மாவை வைத்து, தட்டின் மேல் முறுக்கு போன்று சுற்ற வேண்டும்.
பின் அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் முறுக்குகளாக சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு முறுக்கு ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
