Latest Updates
-
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்!
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Sorakkai Kootu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? இப்படி ஒரே சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து கூட்டு செய்யுங்கள். இப்படி செய்யும் கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக சுரைக்காய் சாப்பிடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சுரைக்காய் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சுரைக்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 1/4 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை ஒரு கிண்ணத்தில்
எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சுரைக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை கழுவி
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சுரைக்காய் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications
