Latest Updates
-
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா?
பேச்சுலர்களுக்கான... மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் ஸ்பெஷல் சிறுவாணி சிக்கன்.. எப்படி செய்றது-ன்னு பாருங்க..
Madhampatty's Siruvani Chicken Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்துள்ளீர்களா? அந்த சிக்கனை சற்று வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் சிக்னேச்சர் ரெசிபியான சிறுவாணி சிக்கனை செய்யுங்கள்.
இந்த சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு ரெசிபியும் கூட. ஏனெனில் இது சிக்கன் மற்றும் துவரம் பருப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. முக்கியமாக இது பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் ஸ்பெஷல் சிறுவாணி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் ஸ்பெஷல் சிறுவாணி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 50 கிராம்
* பூண்டு - 50 கிராம்
* வரமிளகாய் - 4
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 100 கிராம்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய்
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் அரைத்து வைத்துள்ள சின்ன
வெங்காய பேஸ்ட்டை சேர்த்து நன்கு பிரட்டி, அத்துடன் மஞ்சள் தூள்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் 100 கிராம் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அதில் 1
1/2 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அந்த பருப்பு நீரை வடிகட்டி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பருப்பை மென்மையாக
மசித்து, அதையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை, சின்ன
வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நீர் விட்டு வரும்
வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் எடுத்து வைத்துள்ள பருப்பு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நீர் வற்றும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு 5 நிமிடம்
வேக வைத்து, சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கினால், சுவையான சிறுவாணி
சிக்கன் தயார்.
Image Courtesy: All Time Eats Enjoy



Click it and Unblock the Notifications