Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Rice Pakora : சிம்பிளான.. அரிசி பக்கோடா
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வெள்ளை சாதம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய அரிசி பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வெள்ளை சாதம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய அரிசி பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த அரிசி பக்கோடாவை செய்வது சுலபம் மற்றும் இது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது. அதோடு இந்த அரிசி பக்கோடா காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு அரிசி பக்கோடா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை சாதம் - 2 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சாதத்தை மத்து கொண்டு நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் எண்ணெயைத் தவிர, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீர் தெளித்து கரண்டியால் நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலவையை சிறு உருண்டை உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அரிசி பக்கோடா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

