Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும்
கடலை மாவு இருக்கா? அப்ப இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசை, பூரிக்கு செமயா இருக்கும்..
Besan Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? எப்போதும் காலையில் இட்லி, தோசை சாப்பிடுவது சரி, அதற்காக சைடு டிஷ் கூட ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை தானே.
நீங்களும் தினமும் ஒரு வித்தியாசமான சைடு டிஷ்ஷை வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும், இட்லி, தோசை, பூரிக்கு ஏற்றவாறு இருக்கும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கடலை மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சட்னியை 10 நிமிடத்தில் செய்யுங்கள்.

இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு கடலை மாவு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலை மாவு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்து, 1 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை
மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 1 கப்
நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* உங்களுக்கு நீர் போன்று வேண்டுமானால், அதற்கு தகுந்தாற் போல நீரை
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கடலை
மாவு சட்னி தயார்.
Image Courtesy: subbuskitchen



Click it and Unblock the Notifications