Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
Headline for Deeplink -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
இட்லி, தோசைக்கு இந்த சரவணபவன் தக்காளி சட்னியை செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Saravanabhavan Tomato Chutney Recipe In Tamil: ஹோட்டல்களில் கிடைக்கும் சட்னி எப்போதும் எல்லாருக்கும் பிடிக்கும், அதிலும் சில பிரபல உணவகங்களில் கிடைக்கும் சட்டினி வகைகளுக்கு தனி சிறப்பு உண்டு. என்ன தான் வீட்டில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து அரைத்தாலும், ஹோட்டல்களில் சாப்பிடும் சட்னிகளின் சுவையே தனி தான், அந்த வரிசையில் ஹோட்டல் சரவணபவன் ஸ்டைலில் தக்காளி சட்னி எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- தக்காளி - 4
- பூண்டு - 10 பல்
- வரமிளகாய் - 5
- பெரிய வெங்காயம் - 1 (பெரியது)
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பூண்டு - 4 பல்
செய்முறை:
- பெரிய வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.
- அதன் மேற்பரப்பில் கருப்பாக பூஞ்சை படலம் இருப்பின் அதை சுத்தமாக தண்ணீரில் கழுவி விடவும்.
- பின் அவற்றை வதக்கி அரைப்பதற்கு ஏற்ப நறுக்கி கொள்ளவும்.
- நீங்கள் சின்ன வெங்காயம் சேர்க்க விரும்பினால் 12 அல்லது 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து கொள்ளலாம்.
- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியின் மேற்பகுதியை நீக்கி விட்டு
சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
- அதில் தாளிக்க வைத்திருக்கும் பூண்டு பற்களை நீளவாக்கி நறுக்கி
வைத்து கொள்ளவும்.
வரமிளகாயின் காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்தது அதில் தோல் உரித்து வைத்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின் அதனுடன் வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதில் தோல் உரித்து நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- கடைசியாக அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கி நன்றாக ஆற வைக்கவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னியாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் நீளவாக்கி நறுக்கிய பூண்டு, கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதை அரைத்து வைத்த சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான சரவணபவன் ஸ்டைல் தக்காளி சட்னி தயார்!



Click it and Unblock the Notifications