Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
சரவணபவன் ஸ்டைல் மல்லி சட்னி சுவையின் ரகசியம் இதுதாங்க.. தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..
Saravana Bhavan Style Malli Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த டிபனுக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் கொத்தமல்லி 1 கட்டு உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு மிகவும் பிரபலமான ஹோட்டலான சரவணபவன் ஸ்டைல் மல்லி சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னியின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் பொருட்களும், பக்குவமாக செய்யும் விதமும் தான். இந்த கொத்தமல்லி சட்னியை ஒருமுறை செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க சொல்வார்கள். முக்கியமாக இந்த சட்னி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சரவண பவன் ஸ்டைல் மல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவண பவன் ஸ்டைல் மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4-5 பல்
* சின்ன வெங்காயம் - 10
* பச்சை மிளகாய் - 3-4
* தேங்காய் - 3 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியை சுத்தம் செய்து, நீரில் அலசி சேர்த்து
2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, 1
நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான சரவணபவன் ஸ்டைல்
மல்லி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











