Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சரவணபவன் ஸ்டைல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம் இதுதாங்க.. தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..
Saravana Bhavan Style Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்வீர்களா? ஆனால் நீங்கள் செய்யும் தேங்காய் சட்னி அவ்வளவு சுவையாக இருக்காதா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஹோட்டலில் கொடுக்கப்படும் தேங்காய் சட்னி போன்று செய்து கொடுங்கள்.
இப்படி தேங்காய் சட்னி செய்யும் போது, தேங்காய் சட்னி பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னியின் ஸ்பெஷலே இதில் சேர்க்கப்படும் ஒருசில பொருட்கள் தான். இந்த பக்குவத்தில் செய்யும் போது, தேங்காய் சட்னியின் சுவையே வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு சரவணபவன் ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி (முருவியது)
* சின்ன வெங்காயம் - 5
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புதினா - 10 இலை
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ள
வேண்டும். தேங்காய் துருவும் போது அதன் கருப்பு பகுதி வராமல்
துருவுங்கள்.
* பின் அத்துடன் 5 சின்ன வெங்காயம், 2 பூண்டு பற்கள், சிறிய துண்டு
இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பொட்டுக்கடலையை 2 டேபிள் ஸ்பூன் சேர்க்க வேண்டும். இந்த
சட்னிக்கு பொட்டுக்கடலை அதிகமாக இருக்கக்கூடாது. தேங்காய் தான்
அதிகமாக இருக்க வேண்டும்.
* பிறகு அதில் 10 புதினா இலைகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, நீரை
அதிகமாக ஊற்றாமல், சற்று அளவாக ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான ஹோட்டல்
ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications