Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீங்க... எடையும் குறையும்..
Samba Rava Kanji Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் சில நாட்களில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள். கஞ்சியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சம்பா கோதுமை ரவை கஞ்சி. இந்த வகை கஞ்சி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.
அதுவும் இந்த கஞ்சியில் காய்கறிகள் சேர்த்திருப்பதால், இது சத்தானதும் கூட. முக்கியாக காலையில் இந்த கஞ்சியை ஒரு கப் குடித்தால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து சுறுசுறுப்பாக இருக்கலாம். அதோடு உடல் எடையிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்களுக்கு சம்பா ரவை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சம்பா ரவை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை சம்பா ரவை - 1 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* பீன்ஸ் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் சம்பா கோதுமை ரவையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பை சேர்த்து, இரண்டையும்,
நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு மசித்து, கஞ்சி பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
சேர்த்து சூடானதும், பொடியாக நறுகிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளியை
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள ரவையை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி,
புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான சம்பா கோதுமை ரவை கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications