Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதால் பிள்ளைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இருப்பினும், நாம் "ஆரோக்கியமானது" என்று நினைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் சில உணவுகளில், குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சர்க்கரை மறைந்து இருக்கலாம்.
இதன் விளைவாக அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை குழந்தைகளின் உடல் எடையை அதிகரிப்பது, பற்களை சேதப்படுத்துவது, அதிக உடல் சோர்வு ஆகியவற்றிற்கு வழிவகுப்பதோடு, காலப்போக்கில் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

'Gyaan by Ganesh - Making India Win Over Diabetes' என்பது சன் பார்மா நிறுவனம், அமெரிக்க நீரிழிவு சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஒரு விழிப்புணர்வு முன்னெடுப்பாகும். இது நிபுணர்களின் ஆதரவு பெற்ற தகவல்கள் மூலம், இந்தியர்கள் நீரிழிவு நோயை நன்கு புரிந்துகொள்ளவும், தடுக்கவும், நிர்வகிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீப காலமாக, குழந்தைகளிடையே சர்க்கரை நோய் பாதிப்பு ஆபத்தான வகையில் அதிகரித்து வருகின்றன. அதுவும் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைப் பருவ சர்க்கரை நோய் பாதிப்புகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
'Frontiers in Endocrinology' என்றும் இதழில் வெளியான ஒரு சமீபத்திய ஆய்வில், 204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே சர்க்கரை நோயின் போக்குகளை ஆராய்ந்தது. அதில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே டைப்-2 சர்க்கரை நோய் பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இது, அன்றாட உணவுகளில் உள்ள மறைக்கப்பட்ட சர்க்கரை மூலங்களை பெற்றோர்கள் கண்டறிவதை இன்னும் முக்கியமானதாக ஆக்குகிறது.
"ஒரு மதிய உணவுப் பாக்ஸ் ஆரோக்கியமானதாகத் தோன்றலாம், ஆனால் அதில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், சுவையூட்டப்பட்ட தயிர், பிஸ்கட்டுகள், தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளிலிருந்து வரும் அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துக்களும், மறைந்திருக்கும் செயற்கை சர்க்கரைகளும் இருக்கலாம். இந்த உணவுகள் ஒரு குழந்தையின் இரத்தச் சர்க்கரையில் விரைவான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களைப் பசியாகவோ அல்லது சோர்வாகவோ உணரவைக்கலாம். சீரான ஆற்றல், கவனம் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க முழு தானிய மாவுச்சத்துக்களை புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், காய்கறிகள் மற்றும் முழுப் பழங்களுடன் இணைக்கும் சமச்சீரான மதிய உணவைக் கொடுப்பதை பெற்றோர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்."
Dr. Kannan Alagarsamy, Consultant Diabetology, Alagar Diabetes Care centre, Annanagar, Madurai
1. பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள்
பல பெற்றோர்கள் பழச்சாறு என்றாலே ஆரோக்கியமானது தான் என்று நினைக்கின்றனர். ஆனால் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பழச்சாறுகளில் கூடுதல் சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதுவும் ஒரு சிறிய ஜூஸ் பாக்கெட்டில் கூட 4 முதல் 6 டீஸ்பூன் வரை சர்க்கரை இருக்கலாம். இது குழந்தைகளின் தினசரி சர்க்கரை அளவை எளிதாக மீறச் செய்து, உடலில் தேவையற்ற சர்க்கரையை சேர்க்கலாம்.
மாற்று வழி:
* எப்போதும் குழந்தைகளுக்கு முழுப் பழங்களை கொடுங்கள்.
* வீட்டிலேயே பழச்சாறுகளை தயாரித்து, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க கொடுங்கள்.
* லெமன் ஜூஸ் அல்லது மோர் போன்ற பானங்கள் மிகவும் சிறந்தவை.
2. ஃப்ளேவர்டு யோகர்ட் மற்றும் தயிர் வகைகள்
ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் அல்லது சாக்லேட் ப்ளேவர் கொண்ட யோகர்ட்கள் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கலாம். ஆனால் இவற்றில் அதிக அளவு சர்க்கரையும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மாற்று வழி:
வீட்டில் தயாரித்த தயிரில் குழந்தைகளுக்கு பிடித்த பழத்துண்டுகளை சேர்த்து கொடுங்கள்.
3. கிரானோலா மற்றும் சீரியல் பார்கள்
குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன் இன்றியமையாதது. இந்த புரோட்டீன் அதிகம் நிறைந்ததாக கூறி கிரானோலா மற்றும் சீரியல் பார்கள் விற்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவற்றில் புரோட்டீன் இருந்தாலும், அதை விட அதிகமாக சர்க்கரை, தேன், கார்ன் சிரப் போன்ற இனிப்புப் பொருட்கள் அதிகமாக உள்ளன. இதனால் இவற்றை உட்கொள்ளும் போது குழந்தைகள் வயிறு நிரம்பிய உணர்வைப் பெற்றாலும், உடலுக்குள் தேவையற்ற கலோரிகள் செல்கின்றன.
மாற்று வழி:
வறுத்த வேர்க்கடலை, பாதாம், முந்திரி போன்றவற்றைக் கொண்டு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் லட்டு தயாரித்து கொடுங்கள்.
4. சாக்லேட் ஸ்ப்ரெட் தடவிய பிரட்
சில சமயங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சாக்லேட் ஸ்ப்ரெட் தடவிய பிரட்டை லன்ச்பாக்ஸில் வைத்துக் கொடுப்பார்கள். ஏனெனில் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த சாக்லேட் ஸ்ப்ரெட்டில் சர்க்கரையும், கொழுப்பும் அதிகமாக உள்ளன. இதை குழந்தைகள் அடிக்கடி உட்கொள்ளும் போது உடல் பருமனடைவதோடு, காலப்போக்கில் சர்க்கரை நோயின் அபாயமும் அதிகரிக்கும்.
மாற்று வழி:
வேண்டுமானால் குழந்தைகளுக்கு வெஜிடேபிள் சாண்ட்விட்ச் அல்லது வீட்டில் தயாரித்த சட்னியைக் கொடுக்கலாம்.
5. குக்கீஸ், இனிப்பு பிஸ்கட்
சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸில் ஸ்நாக்ஸாக குக்கீஸ், இனிப்பு பிஸ்கட் போன்றவற்றை வைத்து கொடுப்பார்கள். ஆனால் இந்த சிறிய பிஸ்கட்டுகள் கூட மறைமுகமாக குழந்தைகளுக்கு அதிக சர்க்கரையை வழங்குகின்றன. அதுவும் சில குக்கீஸ்களில் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் டிரான்ஸ் கொழுப்பும் சேர்ந்து இருக்கும்.
மாற்று வழி:
குழந்தைகளுக்கு வீட்டிலேயே ராகி குக்கீஸ், ஓட்ஸ் பிஸ்கட் அல்லது வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயாரித்த ஸ்நாக்ஸை கொடுக்கலாம்.
6. சுவையூட்டப்பட்ட பால் பானங்கள்
பால் குடிக்காத குழந்தைகள் சாக்லேட் மில்க், ஸ்ட்ராபெரி மில்க் போன்றவற்றை விரும்பி குடிக்கும் போது பல பெற்றோர்களும் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் இவற்றில் கூடுதல் சர்க்கரை இருக்கும். இதை தொடர்ந்து அடிக்கடி வாங்கி குடிக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
மாற்று வழி:
குழந்தைகளுக்கு வீட்டிலேயே தயாரித்த பாதாம் பால், மஞ்சள் பால் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
7. "குறைந்த கொழுப்பு" உணவுகள் ஆரோக்கியமானவை என்ற தவறான நம்பிக்கை
சில உணவுப் பொருட்களில் "Low Fat" அல்லது "Fat Free" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த உணவுகளில் கொழுப்பைக் குறைப்பதற்காக கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படும். இதனால் குழந்தைகள் அறியாமலேயே அதிக சர்க்கரையை உட்கொள்கின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
உணவுப் பொருள் வாங்கும் போது, அதன் Nutrition Label-ஐ பார்க்க வேண்டும். Added Sugar அளவை சரிபார்க்க வேண்டும். முக்கியமாக Ingredients பட்டியலில் Sugar, Corn Syrup, Dextrose, Fructose போன்ற வார்த்தைகள் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்?
அதிக சர்க்கரை உட்கொள்ளும் குழந்தைகள் பின்வரும் பிரச்சனைகளை சந்திக்கலாம். அவையாவன:
* உடல் எடை அதிகரிப்பு
* பல் சொத்தை
* கவனக்குறைவு
* அதிக பசி
* சோர்வு
* எதிர்காலத்தில் சர்க்கரை நோய் அபாயம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரோக்கியமான லன்ச்பாக்ஸை தயார் செய்வது எப்படி?
ஆரோக்கியமான லன்ச்பாக்ஸ் என்றால் அதில் உள்ள உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது, அதில் ஒரு பழம், ஒரு காய்கறி, புரோட்டீன் நிறைந்த உணவு, முழுதானிய உணவுகள், தண்ணீர் அல்லது மோர் போன்றவை இருக்க வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கும், பள்ளியில் கவனமாக படிப்பதற்கும் உதவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தப் பொருள் நோயாளிகளுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாகாது. Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL) துல்லியமான மற்றும் காலத்திற்கேற்ற தகவல்களை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இருப்பினும், இது குறித்து எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகி, அவர்களின் ஆலோசனையை மட்டுமே பின்பற்ற வேண்டும். Sun Pharmaceuticals Laboratories Limited (SPLL)-க்கு தெரியப்படுத்தாமல், இதன் எந்தப் பகுதியையும் இயந்திரம் அல்லது மின்னணுவியல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மறுஉருவாக்கம் செய்யவோ, பரப்பவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.
SPI-IN-CVD-ZT---07-20260103



Click it and Unblock the Notifications
