Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
சாமை கட்லெட்
சிறுதானியங்களைக் கொண்டு பல சுவையான ஸ்நாக்ஸ்களையும் செய்யலாம். குறிப்பாக பலரும் விரும்பி சாப்பிடும் கட்லெட்டுகளை செய்து சாப்பிடலாம். இன்று நாம் காணவிருப்பது சிறுதானியங்களில் ஒன்றான சாமை கட்லெட் பற்றி தான்.
தற்போது பலரும் தங்கள் உணவுகளில் சிறுதானியங்களை அதிகம் உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறுதானியங்களைக் கொண்டு வெறும் உப்புமா, கஞ்சி மட்டும் தான் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. சிறுதானியங்களைக் கொண்டு பல சுவையான ஸ்நாக்ஸ்களையும் செய்யலாம். குறிப்பாக பலரும் விரும்பி சாப்பிடும் கட்லெட்டுகளை செய்து சாப்பிடலாம். இன்று நாம் காணவிருப்பது சிறுதானியங்களில் ஒன்றான சாமை கட்லெட் பற்றி தான்.

சாமை கட்லெட் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு சாமை கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாமை கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாமை - 2 கப் (வேக வைத்தது)
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி கெட்சப், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள சாமையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சாமை கட்லெட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

