சபுதனா கிச்சடி ரெசிபி :சகோ கிச்சடி ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

சபுதனா கிச்சடி ஒரு புகழ்பெற்ற மகாராஷ்டிர ரெசிபி ஆகும். இது எல்லா வீடுகளிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. இந்த கிச்சடி ஐவ்வரிசி (சபுதனா), உருளைக்கிழங்கை வைத்தும் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை பயன்படுத்தியும் காரசாரமாக செய்யப்படும் உணவாகும். இந்த விரத் வாலா சபுதனா கிச்சடி விரதத்தின் போது தயாரித்து சாப்பிடும் ரெசிபி ஆகும்.

உருளைக்கிழங்குடன் சேர்க்கும் காரசாரமான மசாலா பொருட்களும் புளிப்பு சுவையுடன் கூடிய எலும்மிச்சை சாறும் தித்திக்கும் பவுடர் சுகரும் இப்படி எல்லா சுவையும் கலந்து உங்கள் நாவை சொட்டை போட வைத்து விடும்.

இந்த ஐவ்வரிசி கிச்சடியை மெல்ல மெல்ல ருசித்து சாப்பிட்டு அதனுடன் சேர்க்கப்பட்ட நிலக்கடலையை கொரித்து சாப்பிடும் போது கிடைக்கும் ருசியே தனி தான்.

இதில் உள்ள ஒரு முக்கியமான ட்ரிக், சகோ கிச்சடி செய்யும் போது ஐவ்வரிசியை சரியான பதத்தில் சமைப்பது தான். இது எளிதாக செய்யக்கூடிய ரெசிபி ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தில் கடவுளுக்காக விரதம் இருக்கும் போது இந்த கிச்சடியை தான் தங்களது காலை உணவாக எடுத்துக் கொள்வர்.

இந்த ஐவ்வரிசி கிச்சடியை உங்கள் வீட்டில் செய்வதற்கு முன் அதற்கான செய்முறை விளக்க முறைகளையும் வீடியோ மற்றும் படத்துடனும் காணலாம்.

சபுதனா கிச்சடி ரெசிபி வீடியோ

sabudana khichdi
சபுதனா கிச்சடி ரெசிபி
சபுதனா கிச்சடி ரெசிபி
Prep Time
8 Hours
Cook Time
8H
Total Time
8 Hours20 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: முக்கிய உணவு

Serves: 2-3

Ingredients
  1. ஐவ்வரிசி - 1கப்
  2. தண்ணீர் - 1கப் + அலசுவதற்கு
  3. ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்.
  5. பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
  6. கறிவேப்பிலை - 6-10
  7. வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்) - 2
  8. வறுத்த நிலக்கடலை(கரகரப்பான அரைவை பதத்தில் ) - 3/4கப்
  9. பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
  10. லெமன் ஜூஸ் - 1
  11. உப்பு - தேவைக்கேற்ப
  12. கொத்தமல்லி இலைகள்(நறுக்கியது) - அலங்கரிக்க
  13. வறுத்த நிலக்கடலை - அலங்கரிக்க
Red Rice Kanda Poha
How to Prepare
 • 1.ஐவ்வரிசியை எடுத்து ஒரு சல்லடையில் வைத்து நன்றாக தண்ணீர் விட்டு அதன் ஸ்டார்ச் போகும் வரை அலச வேண்டும்

  2. அதை பிறகு ஒரு பெளலுக்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்

  3. கிட்டதட்ட 6-8 மணிநேரம் ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும்.

  4. கொஞ்சம் ஐவ்வரிசியை எடுத்து நசுக்கி பார்த்தால் அது நசுங்க வேண்டும். இதுவே நன்றாக ஊறினதுக்கான அடையாளம்.

  5. பிறகு பவுடராக்கப்பட்ட சர்க்கரையை வறுத்த நிலக்கடலையுடன் சேர்க்க வேண்டும்

  6. பிறகு அதனுடன் லெமன் ஜூஸை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்

  7. ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

  8. சீரகம் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

  9. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

  10. பிறகு ஊற வைத்த ஐவ்வரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்

  11. பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

  12. ஒரு மூடியை கொண்டு பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

  13. நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த நிலக்கடலையை கொண்டு அலங்கரிக்கவும்.

  14. நாவை ஊற வைக்கும் சுடச்சுட ஐவ்வரிசி கிச்சடி ரெசிபி ரெடி

Instructions
 • 1. ஐவ்வரிசியை ஊற வைக்க அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்தால் போதும். அதிகளவு தண்ணீர் சேர்க்கும் போது ஐவ்வரிசி குழைவதற்கு வாய்ப்புள்ளது.
 • 2. ஐவ்வரிசியை சமைக்கும் போது சரியான பதம் கிடைக்க வேண்டும் என்றால் அதை சரியான முறையில் ஊற வைக்க வேண்டும்.
 • 3. விரதத்திற்காக இதை சமைக்கும் போது ராக் சால்ட் (பாறை வடிவ உப்பை) பயன்படுத்தவும்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 பெளல்
 • கலோரிகள் - 486 கலோரிகள்.
 • கொழுப்பு - 20 கிராம்
 • புரோட்டீன் - 8 கிராம்
 • கார்போஹைட்ரேட் - கார்போஹைட்ரேட்
 • சுகர் - 5 கிராம்.
 • நார்ச்சத்து - 5 கிராம்
 • இரும்புச் சத்து - 12%
 • விட்டமின் சி - 39%

படிப்படியான செய்முறை விளக்கம் :சபுதனா கிச்சடி ரெசிபி எப்படி செய்வது

1. ஐவ்வரிசியை எடுத்து ஒரு சல்லடையில் வைத்து நன்றாக தண்ணீர் விட்டு அதன் ஸ்டார்ச் போகும் வரை அலச வேண்டும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

2. அதை பிறகு ஒரு பெளலுக்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

3. கிட்டதட்ட 6-8 மணிநேரம் ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும்.

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

4.கொஞ்சம் ஐவ்வரிசியை எடுத்து நசுக்கி பார்த்தால் அது நசுங்க வேண்டும். இதுவே நன்றாக ஊறினதுக்கான அடையாளம்.

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

5. பிறகு பவுடராக்கப்பட்ட சர்க்கரையை வறுத்த நிலக்கடலையுடன் சேர்க்க வேண்டும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

6. பிறகு அதனுடன் லெமன் ஜூஸை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

7.ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

8. சீரகம் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

9. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

10. பிறகு ஊற வைத்த ஐவ்வரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

11. பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

12. ஒரு மூடியை கொண்டு பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi

13. நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த நிலக்கடலையை கொண்டு அலங்கரிக்கவும்.

Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
Sabudana Khichdi Recipe: How To Make Sago Khichdi
[ 4 of 5 - 69 Users]
Subscribe Newsletter