Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
ரோட்டுக்கடை வெங்காய சட்னி அவ்வளோ ருசியா இருக்க இந்த 3 பொருள் தான் காரணம்.. அது என்னென்ன-ன்னு பாருங்க..
Rottukadai Vengaya Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு வீட்டில் எத்தனை சட்னியை செய்தாலும், ரோட்டுக்கடையில் கொடுக்கப்படும் சட்னிக்கு இணையாக வராது. அதுவும் ரோட்டுக்கடை வெங்காய சட்னியை எடுத்துக் கொண்டால், சுவை வேற லெவலில் இருக்கும்.
என்ன தான் அந்த சட்னியை வீட்டில் செய்தாலும், அந்த சுவை வராது. ஏனெனில் ரோட்டுக்கடை வெங்காய சட்னி ருசியாக இருக்க, 3 பொருள் ரகசியமாக சேர்க்கப்படுகிறது. அது தான் சீரகம், தக்காளி, புதினா. இந்த மூன்றையும் அளவாக சேர்த்து வந்தால், சட்னியின் சுவையே தனி தான்.

உங்களுக்கு ரோட்டுக்கடை வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 15
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 6
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - 1/2 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து,
அத்துன் வரமிளகாயையும் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் சீரகம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து இலைகள் சுருங்கும் வரை
வதக்கி, அத்துடன் பொட்டுக்கடலை மற்றும் புளியை சேர்த்து, நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்
தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான ரோட்டுக்கடை வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: Cook with Sangeetha



Click it and Unblock the Notifications











