மழை நேரத்துல முட்டைக்கோஸ் வெச்சு.. ஈவ்னிங் இந்த ரோட்டுக்கடை சாட் செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுங்க..

Posted By:

Rottukadai Kalan Masala Recipe In Tamil: தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஸ்பெஷலாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா?

கடைகளில் விற்கப்படும் சாட் ஏதாவது ஒன்றை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால், அதைக் கொண்டு ரோட்டுக்கடை காளான் மசாலாவை செய்யுங்கள். வீட்டிலேயே இந்த காளான் மசாலாவை செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

Rottukadai Kalan How To Make a Rottukadai Kalan Masala Recipe

உங்களுக்கு ரோட்டுக்கடை காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* கோதுமை மாவு/மைதா - 1/2 கப்
* சோள மாவு - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மசாலாவிற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சோள மாவு - 2 டீஸ்பூன் (சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்)
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கார்ன் சிப்ஸ் - சிறிது
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸை எடுத்து, அத்துடன் மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி சாஸை சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அதில் மிளகாய் தூள், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சோள மாவை நீரில் கரைத்து ஊற்றி, சிறிது நீரையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சோள மாவை ஊற்றியதும், அது கெட்டியாகத் தொடங்கும். அப்போது ப்ரை செய்து வைத்துள்ளதை அதில் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி, கரம் மசாலாவை தூவி கிளறி, பின் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி, பரிமாறும் போது மேலே சிறிது நறுக்கிய வெங்காயம் மற்றும் கார்ன் சிப்ஸை தூவினால், சுவையான ரோட்டுக்கடை காளான் மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 14, 2024, 18:15 [IST]
Desktop Bottom Promotion