Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பழைய சாதத்தை வைச்சு சப்பாத்தி செஞ்சு சாப்பிட்ருக்கீங்களா? இப்படி செஞ்சு பாருங்க... சூப்பரா இருக்கும்...!
Rice Chapati Recipe in Tamil: வீட்ல சாப்பாடு மீந்து போன தாளிச்சி சாப்பிடுவோம், பச்சை புளி சாதம் செய்வோம், இல்லை என்றால் தண்ணீரில் ஊற வைத்து பழைய சாதமாக சாப்பிடுவோம் அல்லது அதை வைத்து வடகம் செய்து சாப்பிடுவோம். ஆனால் சப்பாத்தி செய்து சாப்பிட்டிருக்கீறீர்களா? ஆம் மீதமான சாதத்துல சப்பாத்தி செய்து பாருங்க மிருதுவாக இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- மீந்து போன சாதம் - 1 கப்
- கோதுமை மாவு - 2 கப்
- தேவையான அளவு - உப்பு
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் மீதமாக இருக்கும் வடித்த சாதத்தை அளந்து எடுத்து அதில் சேர்க்க வேண்டும்.
- அதற்கு சமமான அளவு கோதுமை மாவையும் சேர்க்க வேண்டும் என்பதால் தான் இதை அளந்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்றாக மிக்ஸி ஜார் முழுவதும் தடவி கொள்ளுங்கள்.
- அதில் அளந்து எடுத்து வைத்த வடித்த சாதத்தை சேர்க்கவும்.
- உங்களுக்கு சாதத்தில் உப்பு சேர்த்து சமைக்கும் பழக்கம் இருந்தால் மாவிற்கு ஏற்றவாறு உப்பை போட்டுக் கொள்ள வேண்டும்.
- அல்லது சாதத்தில் உப்பு சேர்க்கும் பழக்கம் இல்லாத போது மாவிற்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும். இப்பொழுது அவை அனைத்தையும் நன்றாக கிளறிவிட்டு மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும்.
- இதை விட்டு விட்டு அரைத்து திறந்து ஒரு கிளறு கிளறி மறுபடியும் இரண்டு சுற்று சுற்ற வேண்டும்.
- சாதம் முழுவதும் அரைந்து மாவு பதத்திற்கு வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
-தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
- அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது. அந்த சாதத்தில் இருக்கும் ஈரப்பதமே அதிக அளவில் இருக்கும்.
- பின் அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு கோதுமை மாவு சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
- சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த பின் எப்போதும் போல் மாவின் மேல் ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை சேர்த்து நன்றாக தடவி 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைத்து விட வேண்டும்.
- பின் எப்பொழுதும் போல் சப்பாத்திக்கு மாவு உருட்டுவது போல் உருட்டி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போடவும்.
- ஒரு புறம் லேசாக நிறம் மாறியதும் அதை திருப்பி போட்டு உங்கள் விருப்பப்படி சப்பாத்தியில் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
- இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications